பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவர் பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவருமான, பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் நினைவு தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவருமான, பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்… pic.twitter.com/Kpp35kAX6f
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம் என, தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காக உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் நினைவைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.