2024-ல் மீண்டும் மோடிதான் பிரதமர்: "நியூ நாஸ்ட்ரடாமஸ்" கணிப்பு!
Sep 5, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024-ல் மீண்டும் மோடிதான் பிரதமர்: “நியூ நாஸ்ட்ரடாமஸ்” கணிப்பு!

Web Desk by Web Desk
Dec 25, 2023, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பும் வெற்றி பெறுவார்கள் என்று ‛நியூ நாஸ்ட்ரடாமஸ்’ என்று பெயர் பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக் ஹாமில்டன் கணித்திருக்கிறார்.

இன்னும் 6 நாட்களில் 2023-ம் ஆண்டு நிறைவடைந்து 2024-ம் ஆண்டுக்கான புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. ஆகவே, அடுத்த ஆண்டுக்கான கணிப்புகளை ஜோதிடர்களும், ஆய்வாளர்களும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரைச் சேர்ந்த கிரேக் ஹாமில்டன் முக்கிய கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல்களில் வெற்றி பெறுவது யார்? என்பது குறித்த முக்கிய விஷயங்களை கணித்து கூறியிருக்கிறார். அதன்படி, இந்தியாவில் மீண்டும் மோடியே பிரதமராவார் என்று கணித்திருக்கிறார்.

இதுகுறித்து கிரேக் ஹமாமில்டன் வெளியிட்டிருக்கும் கணிப்பில், “தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மீண்டும் நாட்டை வழிநடத்துவதில் உறுதியாக இருக்கிறார். அவர் இப்போதும் ஆட்சியில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் அவரே பிரதமராக தேர்வு செய்யப்படுவார். பிரதமர் மோடி இந்தியாவை நவீனமயமாக்கி வருவதையும், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை முன்னெடுத்து வருவதையும் நான் கண்டு வருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பற்றி ஹாமில்டன் கூறுகையில், “அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான செயல்கள் நடக்கும். ஆனால், அதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும். மேலும், இந்தத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்தான் வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு கறுப்பின பெண் ஒருவர் உதவி செய்வார்” என்று தெரிவித்திருக்கிறார்.

கிரேக் ஹாமில்டனின் முந்தைய பல கணிப்புகள் அப்படியே நடந்திருக்கின்றன. இதற்கு முன்பு கொரோனா பரவல், டொனால்டு ட்ரம்பின் அதிபர் பதவி, பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்தின் மறைவு ஆகியவை தொடர்பாக ஹாமில்டன் கணித்தது போலவே நடந்தன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இவரது கணிப்புகள் அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது.

16-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோதிடர் நாஸ்ட்ரடாமஸ் என்பவர், ஏராளமான கணிப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார். அந்த கணிப்புகளில் பல அப்படியே நடந்து வருகின்றன. இதனால் கிரேக் ஹாமில்டனை ‛நியூ நாஸ்ட்ரடாமஸ்’ என்று பலரும் அழைத்து வருகின்றனர்.

Tags: PM ModiAgain PMNew Nostradomus
ShareTweetSendShare
Previous Post

இந்திய போர்க் கப்பல் பாதுகாப்புடன் மக்களூரு வரும் கச்சா எண்ணெய் கப்பல்!

Next Post

இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளரான மேற்கிந்திய வீரர்!

Related News

ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies