2023 ஆம் ஆண்டு உலக அளவில் பயனர்கள் அதிகமாக டெலிட் செய்த செயலிகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
உலகளவில் 4.8 பில்லியன் சமூக ஊடக பயனர்கள் உள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 59.9 சதவீகிதம் ஆகும். சமூக வலைத்தளங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணிநேரம் 24 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்.
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் TRG Datacentres என்ற தொழில்நுட்ப நிறுவனம், உலக அளவில் இந்த ஆண்டு பயனர்கள் அதிகம் டெலிட் செய்த செயலி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் நம் யாருப் நம்ப முடியாத வகையில் இன்ஸ்டாகிராம் செயலி முதலிடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த ஆண்டில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவர்களது கணக்கை நீக்குவது தொடர்பாக இணையத்தில் தேடி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்ததாக இரண்டாம் இடத்தில் snapchat உள்ளது. அதாவது இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் தங்களது snapchat கணக்கை எப்படி அகற்றலாம் எனத் தேடியுள்ளனர்.
அதேபோல ட்விட்டர் செயலியை 12 ஆயிரம் பேரும், டெலிகிராம் செயலியை 70 ஆயிரம் பேரும், பேஸ்புக் செயலியை 24 ஆயிரம் பேரும் டெலிட் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவுக்கு இன்ஸ்டாகிராம் செயலியை அனைவரும் டெலிட் செய்ய ஆர்வம் காட்டியிருந்தாலும், சமூக வலைதள உலகில் தொடர்ந்து முன்னணியில் இருப்பது இன்ஸ்டாகிராம் செயலிதான்.
இந்த செயலியை உலகளவில் சுமார் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் செயலியை ஏன் சிலர் அழிக்க நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் இத்தகைய முடிவில் இருப்பது இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தி அல்லது மனச்சோர்வு இதற்கு காரணமாக இருக்கும் என டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர்.