ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு படம் பொங்கல் போட்டியில் இணைகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் மற்ற நாட்களில் வெளியாகும் படங்களை விடத் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் வெளியாகும் படங்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் நடித்துள்ள பான் இந்தியா படமான மெரி கிறிஸ்துமஸ், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டியில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் லால் சலாம் திரைப்படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகியது, இந்நிலையில் லால் சலாம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்றொரு படம் பொங்கல் போட்டியில் இணைந்துள்ளது.
ஏ.ஏல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ மிஷன் சேப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே’. இந்த படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மொத்த உரிமத்தைக் கைப்பற்றியுள்ளனர். இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.