சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 9.45 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 9.45 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.