நியூஸ் கிளிக் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாறுவதாக மனு!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூஸ் கிளிக் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாறுவதாக மனு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் அமித் சக்கரவர்த்தி அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

டெல்லி, மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு நியூஸ் கிளிக் ஆன்லைன் செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சீனப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் செய்தி வெளியிடுவதற்கும் சீனாவின் ஆதரவாளரான அமெரிக்கவைச் சேர்ந்த பில்லியனர் நெவில் ராய் சிங்கமிடம் இருந்து பணம் பெற்றதாகவும், தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நியூஸ் கிளக் நிறுவனத்தின் மீதான நடவடிக்கைகளைத் தொடங்கின. மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மனித வள மேம்பாட்டு அதிகாரி அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தது.

மேலும், இருவர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான உபாவில் வழக்குப் பதிந்தது. இதன் பிறகு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நியூஸ் கிளிக் ஆன்லைன் போர்ட்டலின் அலுவலகம், அதனுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தியது.  டெல்லி, நொய்டா, குருகிராம், மும்பை மற்றும் காஜியாபாத் என குறைந்தது 35 இடங்களில் இச்சோதனை நடந்தது.

இதில் பத்திரிகையாளர்கள், பகுதி நேர பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் என 46 பேரிடம் டெல்லி போலீஸார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, அவர்களின் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 3 மாதம் அவகாசம் கோரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போலீஸார் விண்ணப்பம் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஹர்தீப் கௌர், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், நியூஸ்கிளிக் போர்ட்டலின் மனிதவளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி, இந்த வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், 164-ன் கீழ் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதேசமயம், இந்த விவகாரத்தில் பிரபீர் புர்காயஸ்தா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை நீதிமன்றம் ஜனவரி 2024 வரை நீட்டித்திருக்கிறது.

Tags: News ClickAmit ChakravartyMoves Pleaturn approver
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மீண்டும் மழை!

Next Post

மழை வெள்ளம் குறித்து பிரதமரிடம் அறிக்கை! – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies