தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க கருப்பு முருகானந்தம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஜனவரி 2, 2024 செவ்வாய்கிழமை அன்று, தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்கள்.
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற ஜனவரி 2, 2024 செவ்வாய்கிழமை அன்று, தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்கள். அவர்களது வருகையினை முன்னிட்டு திருச்சியில் ஏற்பாட்டு பணிகளை முழுமையாக கவனித்திடவும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் மாநில பொது செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம்… pic.twitter.com/mchIREVH03
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 25, 2023
அவர்களது வருகையினை முன்னிட்டு திருச்சியில் ஏற்பாட்டு பணிகளை முழுமையாக கவனித்திடவும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.