ஜம்மு-காஷ்மீரில் இன்று நள்ளிரவு 1.10 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் நள்ளிரவு 1.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.