அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.
இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய இரயில்வே புதிய பரிணாமத்தை அடைந்து வருகிறது. பயணிகளின் விரைந்த சேவையை கருத்தில் கொண்டு அதிவிரைவு இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலைத் தொடர்ந்து, அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் மக்களுக்கான சேவையை தொடங்கவுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.
இதற்கான நிகழ்ச்சிகளை மத்திய இரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. டெல்லியில் இருக்கும் இரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் இரயில் பெட்டிகளை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் சிறப்பம்சங்களை கேட்டறிந்து அதிகாரிகளையும் பாராட்டினார்.
முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா வரை இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் விரைவில் பெங்களூருவில் உள்ள மால்டா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், புஷ் மற்றும் புல் எனப்படும் நுட்பத்திறன் கொண்ட அம்ரித் பாரத் இரயில் எஞ்சின் ஒன்று முன்னோக்கி இழுக்கும், இன்னொன்று பின்னால் இருந்து தள்ளும் என்பதால் இரயில் அதிவேகத்தில் பயணம் செய்யும். அதேப் போல வழியில் உள்ள பாதை, திருப்பம், பாலம் போன்றவையும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப தாங்கும் வகையில் சீர்படுத்தப்பட்டுள்ளன.
இரயில் அதிவேகத்தில் பயணித்தாலும் குறைந்த அதிர்ச்சியை உணரப்படும் வகையில், பிரத்தியேக தொழில்நுட்பம் கொண்டு இரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் இந்த இரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரயிலில் 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 3 சிலீப்பர் பெட்டிகள், இரண்டு காவல் பெட்டிகள் என மொத்தமாக 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் பாயிண்ட்கள், தொழில்நுட்ப வசதியுடன் கொண்ட கழிவறை என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 1800 பயணிகள் இந்த இரயிலில் பயணம் செய்யலாம்.
அம்ரித் பாரத் இரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐசிஎப் கோச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் மற்றும் ஐந்து வந்தே பாரத் இரயில்களை டிசம்பர் 30ஆம் தேதி பாரத பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
அதன்படி, அயோத்தி முதல் ஆனந்த் விகார், புது டெல்லி முதல் வைஷ்ணவ தேவ் வரை, அமிர்தசரஸ் முதல் புது டெல்லி வரை, ஜல்னா முதல் மும்பை வரை, கோவை முதல் பெங்களூர் இடையே இரயில்கள் இயக்கப்பட உள்ளன.