தமிழகம் முழுவதுமே ஆன்மீக பூமிதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கும்பகோணத்தில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
இந்தியாவின் பசியை போக்கிய, பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், உலகப்புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜம் ஆகியோர் வாழ்ந்த மண்.
தெற்காசியாவை சனாதன தர்மத்தின் வழி நடத்திய ராஜராஜ சோழன் அவர்களின் சமாதி அமைந்திருக்கும் உடையாழூர் உள்ள தொகுதி. 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமக திருவிழா உலகப் புகழ்பெற்றது. மகாமக குளத்தில் குளித்தால் பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்பது ஐதீகம்.
சுதந்திரப் போராட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று, கும்பகோணம் காங்கேயன் குளத்தின் கரையில், 1942 ஆகஸ்ட் 16 அன்று, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 23 பேரை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
இது குறித்த கல்வெட்டு, கும்பகோணம் போர்ட்டர் ஹால் வெளிச் சுவரில் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, இந்த வரலாறு சொல்லப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஜாலியன் வாலாபாக் போல, கும்பகோணம் தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்தப்படும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மட்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ரூ.10,76,000 கோடி பணம் வழங்கியுள்ளது. நூறு ரூபாய் ஜிஎஸ்டி வரியில், ரூ.71, தமிழகத்துக்கே நேரடியாகத் திரும்பி வழங்கப்படுகிறது.
அது தவிர, பேரிடர் கால நிதி, மத்திய அரசு திட்டங்கள் என, தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரி பணத்திற்கு இரண்டு ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நிதியை எல்லாம் ஊழல் செய்துவிட்டு, மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக மத்திய அரசிடம் கேட்கும் நிதி, உண்மையில், முதலமைச்சரின் மகனும் மருமகனும் ஒரு ஆண்டில் சம்பாதித்த 30,000 கோடி பணத்திலும், செந்தில் பாலாஜி வைத்திருக்கும் பணத்திலும், பொன்முடி, வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கும் 42 கோடி ரூபாய் பணத்திலும், 4600 கோடி ரூபாய் மணல் கொள்ளை பணத்திலும், போக்குவரத்துத் துறையில் நடந்திருக்கும் 2000 கோடி ரூபாய் ஊழலிலும், ஜகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட #DMKFiles மூன்று லட்சம் கோடி பணத்திலும்தான் இருக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை பார்க்க வராத முதலமைச்சர் ஸ்டாலின், இந்தி கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி சென்றார். இதுதான் மக்கள் மீது அவருக்கு உள்ள அக்கறை.
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளுக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுக்கான ஆட்சி அல்ல.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், காசி எனும் கோவில் நகரம் இன்று தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதுமே ஆன்மீக பூமிதான்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் இழந்த தனது பெருமையை மீட்க வேண்டுமென்றால், தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.