ஓசூரில் புள்ளி மான்களை வேட்டையாடிய 7 பேருக்கு தலா ரூ .50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
ஓசூர் அருகே சூசுவாடி கிராமத்தில் உள்ள பொது குளத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று புள்ளிமான் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் புள்ளிமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.
இதில் சூசுவாடி பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் புள்ளி மான்களை வேட்டையாடி இறைச்சியை விற்றது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்லப்பன் (65), ராம்ராஜ் (31), ராஜீவ் (31), நாகராஜ் (28), சிவராஜ்குமார் (31), மாரியப்பன் (65) மற்றும் 18 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டனர்.
வனத்துறையினர் அப்பகுதிக்குச் செல்வதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவர்கள், மான்களின் உடலைச் சிதைத்து குளத்தில் போட்டுள்ளனர். இதனால் மான்களை வேட்டையாடிய ஏழு பேருக்கு வனத்துறையினர் தலா ரூ .50,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும், வன விலங்குகளை வேட்டையாடினாலோ, வன விலங்குகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்தாலோ, வனவிலங்கு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.