மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!
Oct 25, 2025, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை வந்தடைந்தது ட்ரோன் தாக்குதலுக்குள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல்!

Web Desk by Web Desk
Dec 26, 2023, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த எம்.வி. கெம் புளூட்டோ கப்பல், போர்க் கப்பல் பாதுகாப்புடன் மும்பை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது.

லைபீரியா நாட்டு கொடி பொருத்தப்பட்ட எம்.வி. கெம் புளூட்டோ வணிகக் கப்பல், சௌதி அரேபியாவின் அல் ஜுபைல் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரூ துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது.

கடந்த 23-ம் தேதி இரவு, போர்ப்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் மீது திடீரென ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கப்பல் தீப்பற்றிய நிலையில், உடனடியாக தீ அணைக்கப்பட்டது. மேலும், தாக்குதலில் யாருக்கும் காயமோ, சேதமே ஏற்படவில்லை.

அதேபோல, எம்.வி.சாய்பாபா என்ற கச்சா எண்ணெய் கப்பல் 25 இந்திய ஊழியர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. தெற்கு செங்கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அக்கப்பல் மீதும் 23-ம் தேதி இரவு 10.30 மணியளவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், நார்வே நாட்டின் எம்.வி. ப்ளாமனென் என்ற ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள், ஈரானில் இருந்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான எம்.வி. கெம் புளூட்டோ கப்பல் 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியாட்நாமிய பணியாளர்களுடன் மும்பை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

இதுகுறித்து கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “புளூட்டோ கப்பல் வந்தடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் வெடிகுண்டு அழிப்புக் குழுவினர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மை குறித்து முதற்கட்ட ஆய்வை நடத்தினர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பரப்பளவு, அங்கு கிடைத்த பொருட்கள் மூலம் ட்ரோன் தாக்குதல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், என்ன வகையான மற்றும் எவ்வளவு அளவு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிய தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு தேவைப்படும்.

வெடிகுண்டு அழிப்புக் குழுவின் ஆய்வைத் தொடர்ந்து, எம்.வி. கெம் புளூட்டோவை இயக்குவதற்காக மும்பையில் உள்ள அதன் பொறுப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கப்பலில் இருந்து சரக்குகளை மற்றொரு கப்பல்களுக்கு மாற்றும் முன்பு பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.

Tags: MV Chem PlutoReachesMumbai Port
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியா பேட்டிங்!

Next Post

ப்ரோ கபடி : ஹரியானா ஸ்டீலர்ஸ் அபார வெற்றி!

Related News

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies