இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இன்று ஆரம்பமாகும் இப்போட்டியானது டிசம்பர் 30ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.
இந்தியா வீரர்கள் :
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்,விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், அஸ்வின், ஷர்துல் தாக்குர்,ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா,
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் :
தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டே ஜோர்ஸி, டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், கைல் வீரரைன் (விக்கெட் கீப்பர்), நந்த்ரே பர்கர், மார்க்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி, காகிசோ ரபாடா, டேவிட் பெடிங்ஹாம்.