வாட்சப் ஸ்கிரீன் ஷேர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த புதிய வகை டிஜிட்டல் திருட்டிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று பார்ப்போம்.
உலகமே தொழில்நுட்பத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. காலம் மாறுவது போல் திருடர்களும், திருடும் விதத்தைக் காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
இப்போதெல்லாம் பர்சில் இருக்கும் பணத்தை விட, தொலைப்பேசியில் தான் பணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட திருடர்கள், திருட்டு வித்தையை மாற்றி, மோசடி செய்து வருகின்றனர்.
ஓடிபி, க்யு.ஆர் கோட் மோசடிகளைக் கேள்விப்பட்டிருப்போம், அதன் வகையில் இப்போது ஒரு புதியவகை மோசடியில் ஈடுபட்டுள்ளனர் டிஜிட்டல் திருடர்கள்.
அது தான் வாட்சப் ஸ்கிரீன் ஷேர் மோசடி. வாட்சப் ஸ்க்ரீன் ஷேர் மோசடிகளால் மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும் என்று பல செய்திகள் வந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பாஸ்வேர்டை மாற்றலாம் என்பதால், உங்களால் மீண்டும் அந்த செயலியைப் பயன்படுத்த முடியால் போகும் நிலை ஏற்படும்.
ஸ்கிரீன் ஷேரிங் எனெபிள் செய்யப்பட்டால், மோசடி செய்பவர்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் ரியல்-டைம் அணுகலைப் பெறுவார்கள், மேலும் நீங்கள் பெறக்கூடிய தகவல்களையும், OTPகளையும் அவர்கள் படிக்க முடியும்.
வாட்சப் மோசடிகளிலிருந்து தப்பிக்கும் வழிகள் :
1. வாட்சப்பில் தெரியாத எண்ணிலிருந்து வரும் ஆடியோ/காணொளி அழைப்பை ஒரு போதும் ஏற்க வேண்டாம்.
2. பாஸ்வேர்ட்டை யாருக்கும் வாட்சப்பில் கூற வேண்டாம்.
3. ஓ.டி.பி கிரெடிட்/டெபிட் கார்டு எண் அல்லது CVVயை யாரிடமும் வாட்சப்பில் பகிர வேண்டாம்.
4. நீங்கள் உறுதியாக இல்லாவிட்டால்,ஸ்கிரின் ஷேர் requests ஏற்க வேண்டாம்.