உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பியை திருடிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி பகுதிகளில் நேற்று நள்ளிரவு, உத்தரமேரூர் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெங்கடய்யா பிள்ளை தெருவில், காவல்துறை வாகனத்தை கண்டவுடன் அங்கிருந்த சில நபர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். தப்ப முயன்ற நபர்களை விரட்டி பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்பகுதி காலி மனை ஒன்றில் மின்வாரியத் துறையினருக்கு சொந்தமான
பழுதடைந்த நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட, மின்- உபகரண பொருட்களை திருடியுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கையும்- களவுமாக கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், திருட்டு வழக்கில் பிடிபட்ட
மூவரும், உத்தரமேரூர் வட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த- காளீஷ்வரன், சக்திவேல், கார்த்திக் எனத் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.