தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகிவரும் ‘தளபதி 68’ படத்தில் இணைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.
‘தளபதி 68’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் எனப் பல இடங்களில் தளபதி 68 ஷூட்டிங் நடைபெற்றது. கடைசியாக ஹைதராபாத்தில் நடந்த தளபதி 68 ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய். இவருடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, கிச்சா சுதீப், மீனாட்சி செளத்ரி, இவானா, க்ருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இதனை ரம்யா கிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.