சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி பக்தர்கள் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் சபரிமலைக்கு வந்துள்ளனர்.
சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு 15 மணி நேரம் வரை கியூவில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறாக ஐயப்ப பக்கதர்கள் தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடிப்படை வசிதிகள் கூடச் செய்து கொடுக்காமல் கேரள கம்யூனிஸ்ட் அரசு இருப்பதாக எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.
கூட்ட நெரிசலைக்…
— K.Annamalai (@annamalai_k) December 26, 2023
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.