அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று காலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. தேஜ்பூருக்கு கிழக்கே 42 கிலோ மீட்டர் தொலைவில், அதிகாலை 5.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 20 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில், லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.