இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கர்நாடகாவில் 2 பேரும், குஜராத்தில் ஒருவரும் என மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 72 ஆயிரத்து 756 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.