எண்ணூரில் அமோனியா வாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அமோனியா வாயு கசிந்ததால், அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பதிவில்,
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுகசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
ஆளுநர் ரவி அவர்கள், வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான #வாயுகசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.@PMOIndia @HMOIndia @pibchennai @DDNewsChennai @airnews_Chennai
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 27, 2023