ஒவ்வொரு ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ரஜோரி செக்டரில் ராணுவ வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரஜோரி செக்டரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அங்கு சென்றார். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
நமது ராணுவ வீரர்களையும் நாட்டு மக்களையும் யாரும் கேவலமாகப் பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.காயமடைந்த நமது வீரர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என தெரிவித்தார்.
காயமடைந்த வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. அவர்களின் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு ராணுவ வீரரும் நமக்கு மிகவும் முக்கியமானவர்கள்.நம் வீரர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்கள் என்று நான் நம்புகிறேன்.இந்த உணர்வு நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களையும்,நாட்டு மக்களையும் யாரும் கேவலமாகப் பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களுக்கு என்ன ஒத்துழைப்பு தேவையோ அதனை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ராஜ்நாத்சிங் கூறினார்.