மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!
Aug 19, 2025, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!

- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!

Web Desk by Web Desk
Dec 27, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு  குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார்.

புது தில்லியில் இன்று நடைபெற்ற கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர்,

உலகத் தரம் வாய்ந்த செயல்திறன், ஒருமைப்பாட்டின் வலிமையில் கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனம் 13 ஆண்டுகளிலேயே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்றார்.

இங்கு 1000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதன்  வாயிலாக இந்நிறுவனம் ஒரு சர்வதேச சுகாதார மையமாக மாறி வருகிறது என்று கூறினார்.

நவீன தகவல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பால், சுகாதாரத் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும்  நோய்த்தடுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.

நம் நாட்டில் கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் தீவிரமாக உள்ளன, மேலும் அவற்றால் ஏற்படும் ஏராளமான நோய்கள் கவலைக்குரியவை. கல்லீரல் நோய்களைத் தடுப்பதில் கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்தியவர், நீண்டப் பணி நேரம், தொடர்ச்சியான அவசர சிகிச்சைகள், இரவுப் பணிகள் போன்ற சவால்களுக்கு மத்தியில், அவர்கள் தொடர்ந்து முழு விழிப்புணர்வுடனும், உற்சாகத்துடனும் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார்.

சவால்கள் இருந்தபோதும், மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாகவும் விழிப்புடனும் இருப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.

Tags: President Droupadi MurmuPresident Droupadi Murmu graced 9th convocation of the Institute of Liver and Biliary Sciences (ILBS).
ShareTweetSendShare
Previous Post

இந்திய – நேபாள எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Next Post

ரிசர்வ் வங்கி உட்பட 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies