இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் 2 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி 5 பௌண்டரீஸ் அடித்து 38 ரன்களை குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி 105 பந்துகளில் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அஸ்வின் 8 ரன்களிலும், ஷர்துல் தாக்குர் 28 ரன்களிலும், ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களுடன் களத்தில் இருந்தது.
முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 விக்கெட்களையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் முகமது சிராஜ் காலத்தில் இருந்தனர்.
போட்டி தொடங்கிய சற்று நேரத்திலேயே முகமது சிராஜ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இறுதியாக கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸ் முதல் பேட்டிங் முடிவில் இந்திய அணி 245 ரன்களை எடுத்துள்ளது.
இரண்டாம் நாளில் தென் ஆப்பிரிக்காவின் நந்த்ரே பர்கர் 1 விக்கெட்டும், ஜெரால்ட் கோட்ஸி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடங்க வீரர்க களமிறங்கிய ஐடன் மார்க்ராம் முகமது சிராஜ் பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களுடன் விளையாடிவருகிறது.