கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில், பயனாளிகள், பொதுமக்களுடன் பிரதமர் மோடியின் உரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டறிந்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
வளர்ச்சியடைந்த பாரதமே நமது லட்சியம் என்ற நோக்கோடு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்திருக்கும் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளோடு இன்றைய தினம், பிரதமர் மோடி நேரடியாக உரையாடினார்.
வளர்ச்சியடைந்த பாரதமே நமது லட்சியம் என்ற நோக்கோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் முன்னெடுத்திருக்கும் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளோடு இன்றைய தினம், மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேரடியாக உரையாடினார்… pic.twitter.com/GQQ3NhSkCn
— K.Annamalai (@annamalai_k) December 27, 2023
ஒவ்வொருவருக்கும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, வீடற்றவர்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை வசதி என, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை முற்றிலுமாக உயர்த்தியுள்ள மத்திய அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களின் பயனாளிகள், நாடு முழுவதுமிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில், பயனாளிகள், பொதுமக்கள், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் மற்றும் தமிழக பாஜக
சகோதர சகோதரிகளுடன் இணைந்து, பாரதப் பிரதமர் மோடியின் உரையைக் கேட்டு மகிழ்ந்தோம்.