அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திர எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் வசித்து வந்சத ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் 7 பேர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிருகக்காட்சி சாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
டெக்சாஸ் ஜான்சன் கவுண்டி சாலையில் மினி வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிரே தவறான வழியில் வந்த பிக் அப் வாகனம் அவர்களின் வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த லோகோஷ் என்பவர் சிக்ச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பிக் அப் வண்டியில் வந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களை மீட்க முயற்சி செய்து வருவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷ் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் இந்தியா அழைத்து வர அவரது ஒப்புதல் தேவை என்றும் ஆந்திர மாநிலம் மும்மிடிவரம் தொகுதி எம்.எல்.ஏ.குமார் தெரிவித்தார்.