மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் (முஸ்லீம்கள்), விவசாயிகளுக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) இடையே இரண்டு நாட்கள் நடந்த மோதலில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியா நாட்டின் பிளாட்டு மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் (முஸ்லீம்கள்), விவசாயிகளுக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. நூற்றுக்கணகானவர்கள் ஒன்று திரண்டு ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மேலும், துப்பாக்கியாலும் சுட்டுக்கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக, இரு பிரிவினர் இடையே நடந்து வரும் மோதலில், சுமாா் 140 போ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை சா்வதேச மனித உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தபோதிலும், கால்நடை வளர்க்கும் (முஸ்லீம்கள்) நாடோடி பழங்குடி இனத்தைச் சோ்ந்த ஆயுதக் குழுவினர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.