டெல்லியில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசிய நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பரப்பவும், அவற்றின் பலன்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்யவும், விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை (VBSY) நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த யாத்திரையின்போது மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பி.எம். உஜ்வாலா யோஜனா, பி.எம். ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஆதார் சேவை மையம் போன்ற நலத்திட்டங்களின் பலன்களை வழக்குவதாகும்.
இந்த நிலையில், விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை இன்று டெல்லியின் பல்வேறு பகுதிகளை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு, பயனாளிகளுடன் உரையாடினார்.
இதையடுத்து, டெல்லி கான்ட் மெஹ்ராம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மீனாட்சி லேகி, அரசின் திட்டத்தைப் பாராட்டி, சாமானிய மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்காத முந்தைய அரசை விமர்சித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சியில் தகவல், கல்வி, தகவல் தொடர்பு வேன்கள், பிரதமர் நரேந்திர மோடியின் செய்திகளை திரைகள் மூலம் காட்சிப்படுத்தின. மேலும், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் காலண்டர்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன.