மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் செயலாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “26.12.2023 அன்று 16 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் 50 ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்களைச் சேர்ந்த 290 நோடல் அதிகாரிகளுடன் நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் பிரச்சாரம் 2.0-ன் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்களின் சிறப்பான சேவைகளைப் பாராட்டியதோடு, ஓய்வூதியம் பெறுபவர்களை அணுகி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை, குறிப்பாக முக அங்கீகார நுட்பம் மூலம் சமர்பிக்க உதவினார்.
அதேபோல, வங்கி அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்கள் படுக்கையில் உள்ள அல்லது உடல் நலம் குன்றிய ஓய்வூதியதாரர்களின் வீடுகள் அல்லது மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களின் DLC-க்களை உருவாக்குவது, அந்த ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றார்.
மேலும், டி.எல்.சி. பிரச்சாரம் 2.0-ன் கீழ் டிசம்பர் 2023 வரை 1.29 கோடி ஓய்வூதியதாரர்கள் டி.எல்.சி.க்களை சமர்ப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 41 லட்சத்திற்கும் அதிகமானோர் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்.
மேலும், இப்பிரச்சாரத்தின் விளைவாக, முக அங்கீகார நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டி.எல்.சி.க்களின் எண்ணிக்கை 21.34 லட்சத்திற்கும் அதிகமாகவும், பயோ மெட்ரிக்ஸைப் பயன்படுத்தி 97.13 லட்சமாகவும், ஐரிஸை பயன்படுத்தி 10.95 லட்சமாகவும் உள்ளது.
இதில், மத்திய அரசு ஓய்வூதியர்கள் 10.43 லட்சம் பேர் முக அங்கீகாரம் மூலமாகவும், 28.90 லட்சம் பேர் பயோ மெட்ரிக் மூலமாகவும், 2.33 லட்சம் பேர் ஐரிஸ் மூலமாகவும் வழங்கி உள்ளனர். DLC-களின் வயது வாரியான தலைமுறையின் பகுப்பாய்வு, 90 வயதுக்கு மேற்பட்ட 27,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், 80 முதல் 90 வயதுக்குட்பட்ட 2.84 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் டிஜிட்டல் முறையை பயன்படுத்தி உள்ளனர்.
திணைக் களத்தால் உருவாக்கப்பட்ட பிரத்யேக DLC போர்ட்டல் படி, DLC உற்பத்திக்கான 5 முன்னணி மாநிலங்கள் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழகம் மற்றும் கேரளா ஆகியவை முறையே 5.48 லட்சம், 5.03 லட்சம், 2.81 லட்சம், 2.78 லட்சம் மற்றும் 2.44 லட்சம் DLC-க்களை உருவாக்கி உள்ளன.
8.22 லட்சம், 2.59 லட்சம், 0.92 லட்சம், 0.74 லட்சம் மற்றும் 0.69 லட்சம் டி.எல்.சி.-க்கும் அதிகமான ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை டி.எல்.சி. உற்பத்திக்கான முன்னணி 5 வங்கிகளாகும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.