விஜயகாந்த் மறைவு தமிழ்த் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு என்று இயக்குநர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.