சினிமா, அரசியலில் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு மக்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த்தின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.
சினிமா மற்றும் அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.