எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டியவர் என்று விஜயகாந்த் பற்றிய தனது நினைவுகளை தி.மு.க. எம்.பி. கனிமொழி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க. நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும், எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழக அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்திருக்கிறார்.