விஜயகாந்தின் உடல் நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
Aug 20, 2026, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்தின் உடல் நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2023, 12:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த விஜயகாந்தின் உடல் நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திரை உலகிலும், அரசியலிலும் சாதித்த விஜயகாந்த் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து வெளிநாடுகளில் பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு மேல் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து  தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நுரையீரலில் அதிகமான சளி காரணமாக மூச்சு விட சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.  மேலும் திரைத்துறை பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து கொண்டு செல்லப்பட்டது.

இங்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை மாலை 4.35 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில்  அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: actor Vijayakanth death
Share
Tweet
SendShare
Previous Post

விஜயகாந்த் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்: டி.டி.வி.தினகரன்!

Next Post

பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர்: கனிமொழி!

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies