விஜயகாந்த் தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக திகழ்ந்தார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக அவர் திகழ்ந்தார். அதேபோல, அரசியலில் கால் பதித்து புதிய பாதையில் பயணித்து தனக்கென தனி வாக்கு வங்கியை திரட்டி, அதன்மூலம் பல அரசியல் மாற்றங்களுக்கு கருவியாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த்” என்று தெரிவித்திருக்கிறார்.