தமிழகத்தில் பட்டியலின ஒடுக்குமுறை ஆட்சி நடக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
வேங்கைவயல் துர்வாடை ஆண்டுக்கணக்கில் வீசுகிறது! பார்த்து நகைக்கிறது திமுக!
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் 2022 ம் வருடம் டிசம்பர் 26 ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த வன்கொடுமை செயல் நடந்தது! ஓராண்டு பூர்த்தியாகி விட்டது! ”குற்றவாளியை கண்டுபிடிக்க அரசு விரும்பவில்லை- என்பதுதான் விவரம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது!
அராஜக மேல் ஜாதியினரின் ஆதிக்க கட்சியான திமுகவின் அரசு, ஒரு வருடம் ஆகியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்காமல் வேடிக்கைப்பார்த்து மகிழ்கிறது! காரணம் இத்தகைய அவமானப்படுத்தும் செயல்கள்தான் திமுகவினரின் வேடிக்கை விளையாட்டு! மற்றவர்களை அவமானப்படுத்துவது திமுகவுக்கு கைவந்த கலை! ராமர் சிலைக்கு செருப்புமாலை போட்டு அவமானப் படுத்தியதால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என்று இன்றும் பெருமை பேசிக்கொள்பவர்கள்தான் திமுகவினர்!
இப்போது ஒரு வருடம் ஆகி விட்டது அவமானப்படுத்தினோம் என்ன கிழித்து விட்டீர்கள், போலீஸ் எங்களிடம் இருக்கிறது. உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதாக நடந்துக்கொள்கிறது திமுக! அவமானப்பட்டு தலைகுனிந்து கிடப்பது பட்டியலின சமுதாயம்!
நில உடைமையாளர் சங்கமாக இருந்த நிலச்சுவாந்தார் ஆதிக்க ஜாதியினரின் சங்கம்தான் ”நீதி கட்சி” என்பது! நீதிகட்சி ஆதிக்க ஜாதியினரின் கட்சியாக விளங்கியது! வெள்ளைகாரனோடு சேர்ந்து அரசு நிதியை கொள்ளையடிப்பதும் ஏழை எழிய பட்டியலின மக்களையும் அமைதியான பிராமண சமுதாயத்தினரையும் அவமானப்படுத்துவதும்தான் நீதிக்கட்சியினரின் பணியாக இருந்தது!
நீதி கட்சிதான் பிற்காலத்தில் திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது! திராவிடக்கழகத்தவர்கள் பிராமணர்களின் குடுமியை அறுத்தார்கள், பூநீலை வெட்டினார்கள்! ”குடுமி அறுப்பு போராட்டம்” “பூநூல் அறுப்பு போராட்டம்” பட்டியலின மக்களின் குலதெய்வமான ”ராமர் மற்றும் விநாயகர் சிலைகள் உடைப்பு போராட்டம்” இவைதான் திராவிட கழகத்தின் செயல்பாடுகளாக இருந்தது!
திராவிட கழகம் என்னும் ஆதிக்கஜாதி இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, திராவிட கழகத்தின் ஒருபிரிவினர் திராவிட முன்னேற்றக்கழகம் என பிரிந்துவந்து, தனி கட்சியை துவங்கினர் என்பது வரலாறு!
கட்சிப்பெயர்கள் மாறினாலும் திமுகவின் மேல்ஜாதி ஆதிக்கவெறியும், அமைதியாக தங்களின் வாழ்க்கையை நடத்திச்செல்லும் பட்டியலினம் மற்றும் பிராமண சமுதாயம் போன்ற மக்களையும் அவர்களின் கடவுளரையும் அவமானப்படுத்தி ரசிப்பது என்னும் கொடிய குணம் அப்படியேதான் இருக்கிறது!
26-12-2022 ல் பட்டியலின மக்களின் குடிநீரில் மலம் கலக்கும் வன்கொடுமை நடந்தது! இன்றுவரை ஓராண்டை தாண்டியும் அந்த வன்கொடுமை நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது! குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை!
ஆனால் திமுகவினரோ தங்களை சமூக நீதி காவலர்கள் என தங்களை தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள்! ஆனால், சமூக நீதியை கொலை செய்பவர்கள் இவர்கள்தான்!
திமுகவின் கூட்டனிகட்சிகளும்கூட இந்த வன்கொடுமைக்கு எதிராக செயல்படவில்லை, திமுகவின் கூட்டனி கட்சிகள் என்ன பாரதிய ஜனதா கட்சியை தவிர்த்து தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியும் இந்த வண்கொடுமையை உரிய முறையில் கண்டிக்கவில்லை!
பாரதிய ஜனதாகட்சியின் மாநில தலைவரும் மக்கள் தலைவருமான அன்னாமலை மட்டும்தான், தனது நடைபயணத்தின்போது, இந்த பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்!
திமுக அரசின் நிவாகத்தின் கீழ் செயல்படும் தமிழக அரசு பள்ளிகளில் பட்டியலின மாணவர்களுக்கு தனியாக தண்ணீர் குடிக்கும் டம்ளர் வைக்கப்படுகின்றன! பட்டியலின மாணவர்கள் கடைசி வரிசையில் அமர்த்தப்படுகிறார்கள்! சத்துணவு தனியாக பரிமாறப்படுகிறது! பட்டியலின மாணவர்கள் நன்றாக படித்து முதல் மார்க் வாங்கினாலும் அதற்கான ”அவார்ட்” வழங்கப்படுவதில்லை, மாணவர்கள் பள்ளிக்கு கொண்டுவரும் சைக்கிளில் கூட ஜாதிப்பெயர் குறிக்கப்படுகிறது! இம்மாதிரி பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் பள்ளிகளாகவே தமிழகத்தில் 35 சதவிகித அரசு பள்ளிகள் விளங்குவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது!
பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு தரும் நிதியில் பெரும்பதுதியை மாநில அரசு செலவு செய்யாமல் திருப்பி கொடுத்து விடுகிறது! ஓரளவு நிதி செலவிடப்பட்டாலும் அதில் பெரிய அளவுக்கு ஊழல் செய்யப்படுகிறது!
பட்டியலின ஊராட்சி தலைவியை ஆசனத்தில் அமர திமுகவினர் அனுமதிப்பதில்லை, அவர் தேசியக்கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை!
மொத்தத்தில் தமிழகத்தில் பட்டியலின ஒடுக்குமுறை ஆட்சி நடக்கிறது! பட்டியலின மக்கள் தலை நிமிர்ந்து போராட்டங்களை நடத்தி திமுகவை தமிழகத்தைவிட்டு துடைத்தெறிய வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.