கேப்டன் விஜயகாந்த் பற்றி பலரும் அறிந்திருப்போம். அவரின் திரைத்துறை பயணத்தைப் பற்றித் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம்.
இரண்டு சூப்பர் ஸ்டார்ஸ் :
விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் சிரஞ்சீவி நடித்தனர். அந்த கானூனில் ரஜினியும், சட்டனிக்கி கல்லு லெவ்வில் சிரஞ்சீவியும் நடித்தனர்
வடிவேலுக்கு ஆதரவு :
சினிமாவில் ஜொலிக்க வடிவேலு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் கைகொடுத்து உதவியவர் விஜயகாந்த். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அவரின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருந்தது.
பிரபுதேவா டான்ஸ் :
பரதன் படத்தில் பிரபுதேவா நடன இயக்குநராக இருக்க அவரிடம் விஜயகாந்த் பணியாற்றினார்.
நடிகர் விஜய் :
விஜயின் நடிப்பைக் கவனிக்க வைத்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அப்படத்துக்காக அவர் சம்பளம் எதையுமே வாங்கவில்லை.
100வது படம் சில்வர் ஜூப்ளி :
தன்னுடைய 100வது படமான கேப்டன் பிரபாகரன் படம் சில்வர் ஜூப்ளி வெற்றி பெற்றது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதாவுக்குப் பிறகு 100வது படத்தில் சில்வர் ஜூப்ளியை ருசித்தவர் விஜயகாந்த் மட்டுமே.
கமலுடன் விஜயகாந்த் :
1986ம் ஆண்டு வெளியான மனக்கணக்கு படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். விஜயகாந்துடன் கமல் நடித்த ஒரே திரைப்படம் அதுதான்
தமிழில் 3டி :
தற்போது 3டி என்பது மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என்றாலும் அதனைத் தமிழில் அறிமுகம் செய்தவர் விஜயகாந்த்தான். அவர் நடித்த அன்னைபூமி திரைப்படம்தான் அது.