அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மதுவிலக்கை அமல் படுத்தியுள்ளது உ.பி அரசு.
அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஜனவரி மாதம் 22-ம் தேதி கோவில் மூலவர் பிரதிஷ்டை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராம் மந்திர் பரிக்ரமாமில் இருந்து 84 மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது உத்தர பிரதேச அரசு.
மந்திர் பரிக்ரமா பகுதியின் 84 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்படும் என்று அமைச்சர் நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மதுவிலக்கு தடை என்பது அயோத்தியின் அனைத்து பகுதிக்கும் இல்லை என்றும் கோவிலையை சுற்றிள்ள பகுதியில் மட்டும் தான் மதுவிலக்கு தடை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.