பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகையையொட்டி 6 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பயணிகள் முனைய கட்டிட திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2024ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி திருச்சி வருகிறார்.
பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் திருச்சி வருகையை முன்னிட்டு, சர்வதேச விமான நிலையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட திருச்சி நகர காவல்துறையும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை அதன் எல்லைக்குள் கொண்டுள்ள திருச்சி ஊரகக் காவல்துறையும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்நிலையில்,பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர எல்லைக்குள் ஜனவரி 2-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறுவோர் மீதுமு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.