டெல்லியில் 75-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது.
1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி கொண்ட குடியரசு தேசமாக திகழ்கிறது. ஆனால் 1955-ல் இருந்துதான் குடியரசு தின அணிவகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.
நடப்பு ஆண்டில் எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி பங்கேற்றார். அடுத்த மாதம் நடைபெறும் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார்.
இந்நிலையில் குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை டெல்லியில் தொடங்கியது. இந்தியா கேட் மற்றும் கர்தவ்யா பாதை அருகே மத்தியில் பாதுகாப்புப் படையினர் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.