சென்னையில் ரூபாய் 6000 கொடுக்கப்படுவதும் மத்திய அரசு மாநில நிர்வாகத்திடம் தந்து வைத்திருக்கும் நிதியில் இருந்துதான் தரப்படுகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி பகுதிகளில் வெள்ளச்சேதம் நிகழ்ந்ததால் அதை நேரில் பார்வையிட்டு உதவும்வகையில் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டுதலில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகை தந்து பார்வையிட்டார்கள்! மத்திய கால்நடை, மற்றும் கால்நடை பராமரிப்பு பால் வழங்கல், மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறைகளின் இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களும் வருகைதந்து, இரண்டு மத்திய அமைச்சர்களும் பார்வையிட்டனர்! மத்திய நிதி அமைச்சர் பார்வையிடுகிறார் என்பதால், மாநில நிதியமைச்சரும் உடன் இருந்தார்!
“இங்கு எந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் எம்.எல்.எ க்களும் எம்.பிக்களும் எங்களை வந்து பார்க்கவில்லை, நீங்கள்தான் வந்திருக்கிறீர்கள், இங்கு எந்த ஏரியும் குளமும் ஆறும் தூர்வாரப்படவில்லை, கரைகள் கட்டப்படவில்லை, மழை வரும்முன்பே எங்களுக்கு மாநில நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ மாநகராட்சியோ எவ்வித எச்சரிக்கையினையும் தரவில்லை!
முன்பெல்லாம் இந்த தாமிரபரணி கரையோரம் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கைகள் தரப்படும் நாங்கள் மாற்று இடங்களுக்கு முன் எச்சரிக்கையாக சென்றுவிடுவோம்! ஆனால், இப்போது எவ்வித எச்சரிக்கையும் தரப்படவில்லை!” என்றெல்லாம் பொதுமக்கள் மத்திய அமைச்சர்களிடம் புகார் கூறினர்!
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நிதானமாக வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் 150 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார்! மத்திய கப்பல்படையின் ஹெலிகாப்டர்கள், விமான படையின் ஹெலிகாப்டர்கள், மத்திய அரசின் மீட்டுப்புக்குழுக்கள் ஆகியவை எப்படி செயல்பட்டது? பயன்படுத்தினீர்களா? என்றெல்லாம் கேட்டறிந்தார்கள் மத்திய அமைச்சர்கள்!
மழைவெள்ளம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசின் ஆவாஸ் யோசனா மூலம் வீடு கட்டித்தரப்படும் என்று மக்களிடம் சொன்னார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்! ஆடுமாடுகள் இழப்பு விவரங்களை மாவட்ட ஆட்சி தலைவரிடம் தெரிவியுங்கள், மத்திய அரசு அதற்கான இழ்ப்பீட்டுத்தொகையை வழங்கும் என்றார் நிதி அமைச்சர்!
தொடந்து மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்த நிதி அமைச்சர், வீடற்றுப்போனவர்களுக்கு வீடுகட்டித்தரவும், ஆடுமாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும், அங்கேயே உத்தரவிட்டார்! 32 மனித உயிர் மழையால் பறிபோயிருக்கிறது என்னும் உண்மை மக்களுக்கே அப்போதுதான்; நிதி அமைச்சர் சொன்னதால்தான் தெரியவந்தது! இன்னும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என மக்கள் ஐயம் தெரிவித்தார்கள்! உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்!
ஏற்கெனவே ரூபாய் 800 கோடி மத்திய அரசு நிதியை, இம்மாதிரியான வெள்ளச்சேதம் நிகழாமல் தடுப்பதற்காக, மாநில அரசிடம் மத்திய அரசு தந்திருக்கும் நிலையில், சென்னையில் மழை பெய்யத்துவங்கிய இரண்டாம் நாள் சென்னைக்கு வந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் 450 கோடி பணத்தை மாநில நிர்வாகத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தினார்! நிர்மலா சீதாராமன் அவர்கள் வருகைதருவதற்கும் முன்பாகவே, ஏன் மாநில முதலமைச்சர் வருகைதருவதற்கும் முன்பாகவே மத்திய ஆய்வுக்குழு தூத்துக்குடி பகுதிக்கு வருகைதந்துவிட்டது என்பதும், அவர்கள் எந்த அளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது என கணக்கெடுத்து வருகிறார்கள் என்பதும் குறிபிடத்தக்கது! சென்னை வெள்ள பாதிப்பிற்கும் இத்தகைய கணக்கெடுப்பு நடந்தது!
சென்னையில் ரூபாய் 6000 கொடுக்கப்படுவதும் மத்திய அரசு மாநில நிர்வாகத்திடம் தந்து வைத்திருக்கும் நிதியில் இருந்துதான் தரப்படுகிறது!
வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியில் ஏறத்தாள 75 சதவிகித பங்கு மாநில அரசுக்கு 50 சதவிகிதம் நேரடியாகமும், 25 சதவிகிதம் மத்திய அரசு மூலமாகவும் மாநில நிர்வாக வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடுகிறது! சாராய வரி, பெட்ரோல்வரி, சில கேளிக்கைகள் வரி ஆகியவை மத்திய அரசுக்கு செல்வதில்லை, அவை மொத்தமாக மாநில நிர்வாகத்திடம்தான் சேருகிறது! இப்படி மானில அரசிடமும் அதிகமான மக்கள் வரிப்பணம் இருக்கும் சூழலில், ஏன் மாநில அரசை நடத்துகிறவர்கள் தங்களின் நிர்வாக வங்கிக்கணக்கிலிருந்து எடுத்து, அவசரத்திற்க்குக்கூட நிவாரண செலவு செய்ய மறுக்கிறார்கள் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது!
மாநில நிர்வாகம் தங்களிடம் இருக்கும் வரிப்பணத்தை ஆபத்து நேரத்தில் கூட மக்களுக்கு தருவதில்லை, மத்திய அரசிடமிருந்து அதிக நிதியை பெற்று அதற்கு உரிய கனக்கு காட்டாமல் கபளீகரம் செய்வதிலேயே குறியாக மாநில நிர்வாகம் இருக்கிறது என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது!
மாநில நிர்வாகம் நேர்மையாக மக்களுக்கு உதவவேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்வது! ஆனால், இங்கு நடப்பது வேறாக இருக்கிறது! இந்த நிர்வாகத்தின் ஆட்சியாளர்கள், ஆபத்தான சூழலில்கூட மக்களுக்கு உதவாமல், மக்களின் பணத்தைக்கொண்டு தங்களின் சொத்துக்களை பெருக்கிக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர்!
எனவேதான் மாநில அமைச்சர்களெல்லாம் சிறைச்சாலைகளின் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! இன்று அமைச்சர்கள் கம்பி எண்ணுகிறார்கள் நாளை முதலமைச்சர் கம்பி எண்ணுவார் என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது! காரணம் முதலமைச்சரின் பங்கு இல்லாமல் ஊழல் அமைச்சர்கள் எதையுமே செய்வதில்லை என்பதுதன் தகவலாக இருக்கிறது!
இன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மக்கள் சந்திப்பு மற்றும் வெள்ள சேதம் பார்வையிட்டதை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்! ஒரு நிரூபர் தமிழக முதலைச்சரின் மகனும் முன்னால் முதலமைச்சரின் பேரனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி அவர்களின் “அப்பன்சொத்தா?” என்னும் பேச்சுக்கு என்ன பதில் என கேட்டார்!
“அவருக்கு வாய் அடக்கம் வேண்டும் என கண்டித்த நிர்மலா சீத்தாராமன், இவர் முதலமைச்சரின் மகன் என்னும் வகையில் பதவி அனுபவிக்கிறாரே, இது அவங்க அப்பன் வீட்டு சொத்தா என கேட்கலாமா? ஒரு பொறுப்பில் இருக்கிறவர்களின் வாயில் வரும் வார்த்தைகள் அளவோடு பொறுப்புள்ளதாக இருக்கவேண்டும்” என பதிலளித்தார்!
இவ்வளவு ரத்தின சுருக்கமாக அடக்கத்தோடு அதே வேளையில் அந்த அமைச்சரை கண்டிக்கும் வகையில் ஆணித்தனமாக சொன்னார் மத்திய அமைச்சர்!
நமது ஊடகங்களோ மத்திய அமைச்சரின் பொறுமையான ஆய்வு, மக்களோடு மக்களாக அவரும் கண்கலங்கி நின்றது, புதிய வீடுகளுக்கும், நிவாரணங்களுக்கும் அங்கேயே உத்தரவிட்டது, என மத்திய அமைச்சரின் தொடர்புடைய, சிறப்பான செய்திகளையெல்லாம் புறந்தள்ளி, “மாநில அமைச்சருக்கு மத்திய அமைச்சரின் கண்டிப்பு” என்பதை மட்டும் பெரிது படுத்தினர்!
உடனே பொதுமக்களும்கூட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சொன்னாரே 30,000 கோடி! அது உங்க அப்பன் வீட்டு சொத்தா? 4000 கோடி செலவு செய்ததாக சொன்னீரே அது உங்க அப்பன் வீட்டு சொத்தா? நீங்கள் வைத்திருக்கும் 10 கோடி மதிப்புள்ள கார் உங்க அப்பன்வீட்டு சொத்த? 5 கோடி மதிப்புள்ள வாச்ட் கட்டுகிறீர்களே இது உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் சொன்னதுபோல் எல்லாம் மக்கள் சொத்துதானே! – என்றெல்லாம் பதிவுகளை போட்டுவருகிறார்கள்!
மொத்தத்தில், இங்கு தமிழகத்தில் திமுக நிர்வாகம் சுரண்டுவதில் மட்டும்தான் அக்கரை காட்டி வருகிறது! மத்திய அரசுதான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது! இடையில் மாநில நிர்வாகத்தில் புகுந்துக்கொண்டு சுரண்டும் திமுகவை துடைத்தெடுத்துவிட்டால், அந்த இடத்திலும் பாஜகவை அமரவைத்துவிட்டால் தமிழகம் முன்னேறிவிடும் என்பதைத்தான், மத்திய அமைச்சரின் தூத்துக்குடி பயணம் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது! எனத் தெரிவித்துள்ளார்.