விஜயகாந்த் ஒரு சகாப்தம்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி!
Jul 23, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்த் ஒரு சகாப்தம்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயகாந்த் ஒரு சகாப்தம். அந்த சகாப்தம் முடிந்து விட்டது. கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் எஸ் .ஏ.சந்திரசேகர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி, கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

அதற்காக நான் 2 ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் முடிந்து விட்டது. இந்த நிலையில், கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை.

அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: condolenceDirectorFuneralVijayakanthS.A.Chandrasekar
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

Next Post

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் – நடிகர் அனுபம் கெர் சந்திப்பு!

Related News

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies