அயோத்தி சந்திப்பு ரயில் நிலைய பெயர் மாற்றத்தையடுத்து தொடர்ந்து ‛‛அயோத்தி விமான நிலையம், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 2024 ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள், சாமியார்கள், மடாதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் அயோத்தி ரயில்வே நிலையத்தை வரும் 30ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்தரயில் நிலையத்திற்கு அயோத்தி தாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அயோத்தி விமான நிலையம், மகரிஷி, வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.