விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
Sep 13, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 11:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்தும், ஷூட்டிங் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், “விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி கொண்டவர். அன்பு நண்பர் விஜயகாந்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு. ஆரோக்கியமாக இருந்திருந்தால், தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கி இருப்பார்” என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று காலை தீவுத்திடலுக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த்.

அவருடன் ஒரு முறை பழகிவிட்டால், வாழ்நாள் முழுவதும் அவரது அன்புக்கு அடிமையாகி விடுவார்கள். இதனால், அவருக்கு எத்தனையோ நண்பர்கள் உள்ளனர். உயிரைக் கொடுக்க கூடியவர்களும் உள்ளனர். அனைவர் மீதும் கோபப்படுவார்.

ஆனால், யாருக்கும் அவர் மீது கோபம் வராது. விஜயகாந்த் கோபத்திற்கு பின்னால் சுயநலம் இருக்காது. அன்பு இருக்கும். உடம்பு சரியில்லாமல், மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது, நிறைய பேர் வந்தனர். மலேஷியாவில் ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விரட்டி என்னை காப்பாற்றினார்.

கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமான பெயர். வாழ்க்கையில் எத்தனையோ ரன் எடுத்து 71-ல் முடிந்து விட்டது அவரது வாழ்க்கை. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் என்றால் அவர் விஜயகாந்த். வாழ்க விஜயகாந்த் நாமம்” என்று கூறினார்.

Tags: actorTributeFuneralVijayakanthRajinikanth
Share
Tweet
SendShare
Previous Post

அபுதாபியில் இந்து கோயில் திறப்பு : பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு!

Next Post

மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என அயோத்தி விமான நிலையம் பெயர் மாற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies