விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மேலும், இறுதி அஞ்சலி செலுத்த விரும்பினால் உடனடியாக தீவுத்திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வி.வி.ஐ.பி.க்கள் முதல் சாதாரண தொண்டர்கள் வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் வருவதால், தீவுத்திடல் பகுதியில் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்திருக்கின்றனர். இதனால் 1 மணிக்கு புறப்பட வேண்டிய இறுதி ஊர்வலம் இன்னும் புறப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில்தான், விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மேலும், இறுதி அஞ்சலி செலுத்த விரும்பினால் உடனடியாக தீவுத்திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
தவிர, விஜயகாந்த் நல்லடக்க நிகழ்வில் முக்கிய நபர்கள், உறவினர்கள் என 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், நல்லடகத்தின் போது கவர்னர் ஆர்.என்.ரவி வருவார் என்றும் கூறப்படுகிறது.