விஜயகாந்த் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும், இறுதிச் சடங்குக்கான மொத்த செலவும் தமிழக அரசு சார்பில் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது.
அஞ்சலி செலுத்த பொதுமக்கள் சாரைசாரையாக வந்துகொண்டிருப்பதால், மதியம் 1 மணிக்கு தொடங்க வேண்டிய இறுதி ஊர்வலம் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடிந்தவுடன், தீவுத்திடலில் இருந்து தொடங்கும் இறுதி ஊர்வலம், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை வந்தடையும். அங்கு மாலை 4.45 மணிக்கு மேல் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
அப்போது, 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.