துணை ராணுவப்படைகளின் அனைத்து தகவல் தொடர்புகளும் சாண்டேஸ் செயலிக்கு மாற்றப்படுகிறது.
சாண்டேஸ் அப்ளிகேஷன் என்பது ஒரு திறந்த உள்நாட்டு உடனடி செய்தியிடல் தளமாகும். இது இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அரசு நிறுவனங்களில் உடனடி செய்தித் தொடர்பை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.
இது அரசாங்க உள்கட்டமைப்பில் பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது. இது என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சிஸ்டம். அதன் தனியுரிமை மற்றும் தரவுக் கொள்கை இந்திய அரசாங்கத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில், துணை ராணுவப்படைகளின் அனைத்து தகவல் தொடர்புகளும் சாண்டேஸ் செயலிக்கு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் சிக்கல்களைச் சமாளிக்க வாட்ஸ் அப் செயலிக்கு பதில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘சாண்டேஸ் செயலி’க்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
உள்ளக தகவல் பரிமாற்றத்தில், புதிய செய்தியிடல் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் அம்சங்களைப் பற்றி ஒரு வாரத்தில் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.