2வது கிரிகெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் பேட்டியில், போராட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.
முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 264 ரன்கள் சேர்த்தது.
இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 262 ரன்கள் சேர்த்தது. அப்போது பாட் கம்மின்ஸ் 75வது ஓவரில் பேட்டிங் செய்த போது ஆமீர் ஜமால் வீசிய பந்தை கவர் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் ஓடினார்.
அப்போது ஃபீல்டர் பந்தை எடுத்து பந்துவீச்சாளர் முனைக்கு வீசினார். அங்கே நின்று இருந்த ஷஹீன் அப்ரிடி பந்தை சரியாக பிடிக்கவில்லை. இதை அடுத்து பந்து மீண்டும் பவுண்டரி எல்லையை நோக்கி ஓடியது. அதை பிடிக்க மற்றொரு ஃபீல்டர் ஓடினார். இந்த இடைவெளியை பயன்படுத்தி பாட் கம்மின்ஸ் – அலெக்ஸ் கேரி மேலும் 3 ரன்கள் சேர்த்தனர்.
இதை அடுத்து ஒரே பந்தில் பவுண்டரி அடிக்காமல் 5 ரன்கள் சேர்த்தார் பாட் கம்மின்ஸ். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை.
இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களும், அலெக்ஸ் கேரி 53 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 262 ரன்கள் குவித்து, 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதன் பிறகு 316 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் ஷான் மசூத் மட்டும் நிதானமாக விளையாடி 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அகா சல்மான் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்வரிசை வீரர்களான அமீர் ஜமால், ஷாகீன் அஃப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் டக் அவுட்டில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2 ஆவது இன்னிங்ஸில் 237 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.