ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைக்கால தலைவராக ராகவ் சதாவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜகதீப் நிராகரித்துள்ளார்.
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி விவகாரத்தில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்தது.
தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாததால், ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி கட்சியின் இடைக்காலத் தலைவராக சதாவை நியமிக்குமாறு கெஜ்ரிவால் தன்கரிடம் பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் கெஜ்ரிவால் எழுதியிருந்தார்.
விதிகளை காரணம் காட்டி மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அதனை ஏற்க மறுத்துள்ளார். சதாவை இடைக்காலத் தலைவராக நியமிப்பதற்காக தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சில திருத்தங்களை ராஜ்யசபா அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.