பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தி தாமில் இன்று வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கப் போகிறது” என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அயோத்தி வருகையை மையமாக வைத்து, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புதிய விமான நிலையத்தின் திறப்பு விழா மற்றும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான பிற திட்டங்களைத் தொடங்குவது “வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை” தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
“பிரதமர் மோடி இன்று அயோத்தி தாமுக்கு வந்து சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அயோத்தி அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
காலை 11.15 மணியளவில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பல ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். மதியம் 1 மணியளவில், பிரதமர் மோடி பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார், அப்போது அவர் மாநிலத்தின் 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய சுமார் ரூ.4600 கோடி மதிப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.