அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
பகர்சால் என்ற பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், ரூபாய் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.