ஆளுநர் ஒப்பமிட மறுப்பது மசோதவையல்ல ஊழலை!
May 19, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் ஒப்பமிட மறுப்பது மசோதவையல்ல ஊழலை!

- பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Web Desk by Web Desk
Dec 30, 2023, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் மருத்துவ கல்லூரிகளை திமுகவும் திமுகவை சார்ந்த அரசியல் கட்சிகளுமே நடத்தி வருகிறார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

ஓட்டுனர் நடத்துனர் நியமனத்தில் பணம் வாங்கிதான் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கிறார்! டாஸ்மார்க்கில் பணம் சம்பாதித்தது, மின்சாரத்துறையில் சம்பாதித்தது, என பல குற்றங்கள் இருந்தாலும் நடத்துனர் ஓட்டுனரிடம் நியமனத்திற்காக லஞ்சம் வாங்கியதுதான் செந்தில் பாலாஜி மீதான முதல் குற்றச்சாட்டு!

திமுகவினரின் ஊழல் சொத்து 1,38,317 கோடிகள் என மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் கணக்கிட்டு வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு திமுகவினரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை!

பொன்முடி அவர்களும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்தான் சிறை செல்ல இருக்கிறார்! ”சொத்தும் பணமும் இருக்கிறது, ஆனால் அதை எப்படி சேர்த்தார்கள் என்னும் விவரத்தை அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள்” – என்னும் குற்றச்சாட்டு திமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் இருக்கிறது! விரைவில் சிறைசெல்லும் நிலையில் இன்னும் 11 அமைச்சர்கள் உள்ளனர்!

எப்படி பணத்தை சேர்த்தோம் என்னும் உண்மையை அமைச்சர்களாக இருக்கும் திமுகவினர் சொல்லவில்லை என்றாலும் பொதுமக்களாகிய நமக்கு அது தெரியும்! முறைகேடாக பணம் சேர்க்கும் பல வழிகளில் ஒரு வழி ”அரசு நியமனங்களின்போது பணம் வாங்குவது!” அப்படி பல்கலைக்கழகங்களில் நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதை மாற்றி முதலமைச்சரிடம் இருக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாக்களுக்குத்தான் ஆளுநர் ஒப்பமிடவில்லை என வழக்குப்போட்டு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் திமுகவினர்!”

கிழங்குவகைகளை பயிரிடும் விவசாய நிலத்தின் உள் புகுந்து பயிரை நாசம் செய்துவிடும் பன்றி! பன்றியை பிடித்து, அதை தண்டிக்கும் வகையில் அதன் காதை அறுத்துவிடுவான் விவசாயி! “காதை அறுத்தாலும் பன்றி திருடுவதை நிருத்தாது“ என்பது பழமொழி! ”ஜெயிலுக்குப்போனாலும் திருடுவதை நிருத்த மாட்டார்கள்” என்பது திமுகவினருக்கான புது மொழி! ஆளுநர் எதிர்ப்பு இந்த புது மொழியை நமக்கு உறுதி செய்கிறது!

அரசியலும் ஆட்சியும் மாறி மாறி அமைவது! இன்று ஒருவர் முதலமைச்சராக இருப்பார் நாளை இன்னொருவர் முதலமைச்சராக வருவார்! பல்கலை கழகங்கள் சார்ந்த உயர் படிப்பு என்பது தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வது! பல்கலைக்கழகங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பினை கல்வி அறிவு எதுவும் இல்லாத, பணம் சம்பாதிக்கும் நோக்கம் உடைய அரசியல் வாதிகளிடம் மாற்றி மாற்றி ஒப்படைப்பதைவிட, தமிழகத்திற்கு வெளியில் இருந்து வருகைதரும் ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்களிடம் இருப்பதுதான் நல்லது என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது!

”ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடையியாக மனிதனையும் கடித்ததாம்” என்பார்கள்! அதுபோல ஓட்டுனர் நடத்துனர், சத்துணவு ஆயா என்றெல்லாம் துவங்கி, பல்கலைக்கழகங்கள் வரை கால்பதிக்கவரும் ஊழலை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டியது நமது கடமையாகும்!

பல்கலைகழகங்களில் துணைதலைவர்களையும் மற்ற பேராசிரியர்களையும் நியமனம் செய்யும் உரிமை முதலமைச்சரிடம் இருந்தால், ஒரு லஞ்சத்தை முதலமைச்சாரிடம் கொடுத்துவிட்டு ஒருவரை நியமனம் செய்து நாமும் லஞ்சம் சம்பாதித்துவிடலாம் என்னும் எண்ணத்தில், தமிழகத்தில் இதர அரசியல்வாதிகளும் ஆசையில் இருக்கிறார்கள்!

முன்பெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநர்கள் அவ்வளவு கண்டிப்பாக இருக்கமாட்டார்கள், அவர்களும் எதையாவது வாங்கிக்கொண்டு முதலமைச்சரும் துறை அமைச்சரும் சொல்லும் நபரை நியமணம் செய்துவிடுவார்கள் எனதான் சொல்லப்படுகிறது! இப்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் ஆளுநர்கள் மிக தெளிவாக நேர்மையாக நடந்துகொள்வதால், ஊழல் வாதிகளுக்கு பல்கலைக்கழக நியமன சட்டத்திருத்தம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது!

நீட் தேர்வுகள் நடப்பதால் ஏழை எழிய மாணவர்களால் தேர்வாகி குறைந்த அளவிலான அரசு கட்டணத்தை செலுத்தி மருத்துவம்படிக்க முடிகிறது! ஆனால் அரசியல் வாதிகளால், மருத்துவ இருக்கையை வாங்கித்தருவதற்காக பணம் வாங்க முடியவில்லை! எனவேதான் தமிழகத்தில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சி தலைவர்கள் நீட் இல்லாமல் இருந்தால் வருடத்திற்கு 10 மருத்துவ படிப்பு இருக்கைகளை வாங்கி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள்! எனவேதான் திமுக மட்டுமல்லாமல், பல அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்!

தனியார் மருத்துவ கல்லூரிகளை திமுகவும் திமுகவை சார்ந்த அரசியல் கட்சிகளுமே நடத்தி வருகிறார்கள்! நீட் தேர்வும் நீட்டில் தேர்வான மாணவர்களிடம் வாங்கவேண்டிய குறைந்த அளவிலான கட்டண நிர்ணயமும், தனியார் மருத்துவ கல்லூரி நடத்துவோருக்கு பல்லாயிரக் கோடிக்கணக்கான இழப்பினை தந்துள்ளது! இந்த கல்லூரி அதிபர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டிருந்த பல்வேறு அரசியலாருக்கும் இப்போது இழப்பு ஏற்பட்டுள்ளது! எனவேதான் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்!

“காசேதான் கடவுளடா” என்பது திரைப்படப்பாடல் தமிழக அரசியலை பொறுத்தமட்டில் காசேதான் அரசியலடா! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: governor ravibjpdmk failskumari krishnan article
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர் நியமன மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Next Post

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!

Related News

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies